செவ்வாய், 24 மே, 2011

இன்டர்நெட் குக்கீகளால் என்ன பயன்?

பல வினாக்கள் கொண்ட ஒரு இனைய தளத்தை பார்வையிடுகிறீர்கள்.  முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிளும் உள்ளதாக் வைத்துக் கொள்வோம்.  இரண்டாவது பக்கத்திற்குத் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த
கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே
இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார்  என்பதை அந்த தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் சர்வர் அறிந்து கொள்கிறது.  இவ்வாறு பல இனைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த தளம்
இது எவ்வாறு சாத்தியம்?
மேற் சொன்ன செயற்பபாட்டின் போது வெப் சர்வருக்கு உதவுகிறது.  நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய டெக்ஸ்ட் பைல் குக்கீ எனப்படுகிறது.  சில இனைய தளங்களைப் பார்வையிடும் போது அந்த வெப்சர்வர் ஒரு குக்கீ பைலை நமது கணினியில் சேமித்துவிடுகிறது.  இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரியவர் நீங்கள்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும்.  பிறகு முன்னர் பார்வையிட்ட ஒரு இணையதளத்தை மறுபடியும் பார்வையிடும் போது குக்கீஸ் நமக்கு உதவுகிறது.  அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வேர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்கிறது , இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இனைய தளத்திற்குள் ஒருவரின் செயர்ப்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியும்.  நன்றி...

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...