ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

Aircel வாடிக்கையாளர்களே நீங்களே மொபைல் வழியே Internet Activate செய்யலாம்.

இப்போதெல்லாம் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.   இதனால் அதை வழங்கும் நிறுவனங்களும் தொடர்ந்து விலையை குறைத்துக்கொண்டே போகிறது.  ஆனால் 5 ருபாய்க்கு
Recharge செய்யவேண்டும் என்றாலும் Recharge
கடைகளை தேடி செல்ல வேண்டியிருக்கிறது.  ஆனால் Aircel உபயோகிப்பவர்கள் தங்கள் மொபைலை உபயோகித்தே Recharge செய்துக் கொள்ளலாம்.  முக்கியமான விசயம் உங்கள் மொபைல் Account 'ல் பணம் இருக்கவேண்டும்.  இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்கள் மொபைலில் *234# Dial செய்யுங்கள்.

பிறகு வரும் மெனுவில் 7 (More) தேர்வுசெய்து Replay செய்யுங்கள்.

பிறகு வரும் மெனுவில் 5 (Pocket Internet) தேர்வுசெய்து Replay செய்யுங்கள்.

பிறகு வரும் மெனுவில் 4 வகையான பிளான்கள் தோன்றும்.

1. PI 5           1 day
2. PI 14         3 days
3. PI 29         7 days
4. PI 98         30 days

உங்களுக்கு வேண்டிய Plan 'ஐ தேர்வுசெய்து  Replay செய்யுங்கள்.

உதாரணத்திற்கு 1 தேர்வுசெய்து Replay செய்தால்,  உங்கள் Account 'ல் இருந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு ஒரு நாள் கால அவகாசமும் 50 MB Internet பயன்பாடும் கிடைக்கும்.

நன்றி.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி?

நாம் தினமும் தேடுபொறிகளை உபயோகிக்கிறோம்.  உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை தேடுகிறோம்.  சொந்தமாக நமக்காக நம் பெயரில் ஒரு தேடுபொறி இருந்தால் எப்படி இருக்கும்.  நமக்கே நமக்காக நமக்கு பிடித்த வடிவில் தேடுபொறிகளை உருவாக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.முதலில் Shiny Search என்ற தளத்திற்கு செல்லுங்கள் பிறகுYour Name என்ற இடத்தில் உங்களுடைய தேடுபொறியின் தலைப்பை கொடுங்கள்.

Click to select style...  என்ற இடத்தில் உங்கள் தேடுபொறிக்கான பின்னணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இப்போது உங்களுக்கான தேடுபொறி தயாராகிவிட்டது. 

நான் உருவாக்கிய தேடுபொறி கீழே உள்ளது படத்தில் உள்ளது.இப்போது உலவியின் Address Bar 'ல் உள்ள URL ' ஐ உங்களுக்கு  வேண்டிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

Top 10 Computer Tips ஒரே பதிவில்

     நாம் தினமும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம்.  ஆனால் அதைப்பற்றி முழுவதுமாக நமக்கு தெரியுமா என்று கேட்டால் தெரிவதில்லை  என்றுதான் பலரும் சொல்கிறோம். 

 அதனைப்பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை எழுதியுள்ளேன் நீங்களும் படித்து பயன்பெறுங்கள்.

 1.  COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

 2. ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்

 3. விண்டோஸில் வால் பேப்பர்களை அழிப்பது எப்படி?

 4. இலவச Antivirus 'களில் எது சிறந்தது?

 5. பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை

 6. Hard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்

 7. கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா?

 8. விண்டோசில் காப்பி மற்றும் பேஸ்ட் வேலைகளை வேகமாக்க வேண்டுமா?

 9. ட்ரோஜன் ஹார்ஸ்'ன் கதை

 10. விண்டோஸ் விஸ்டாவில் எளிதாக நெட்வொர்க் இணைப்பு பெற.

   

  நன்றி ......

திங்கள், 5 செப்டம்பர், 2011

Top 5 Mobile Tips ஒரே பதிவில்


நம் அன்றாட வாழ்வில் மொபைல் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.  இது எல்லோருக்குமே தெரியும்.  ஆனால் மொபைல் வைத்திருப்பவர்கள் அதை முழுமையாக பயன்படுத்துகிறார்களா என்று கேட்டால்?  இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
அதற்காகதான் மொபைல் சம்பந்தமான பதிவுகளை எழுத ஆரம்பித்தேன் அதில் ஐந்து இடங்களை பிடித்த பதிவுகளை மட்டும் ஒரு பதிவாக தருகிறேன் இதோ.

     நன்றி...
 

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...