Computer Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Computer Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

Top 10 Computer Tips ஒரே பதிவில்

     நாம் தினமும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம்.  ஆனால் அதைப்பற்றி முழுவதுமாக நமக்கு தெரியுமா என்று கேட்டால் தெரிவதில்லை  என்றுதான் பலரும் சொல்கிறோம். 

 அதனைப்பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை எழுதியுள்ளேன் நீங்களும் படித்து பயன்பெறுங்கள்.

  1.  COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

  2. ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்

  3. விண்டோஸில் வால் பேப்பர்களை அழிப்பது எப்படி?

  4. இலவச Antivirus 'களில் எது சிறந்தது?

  5. பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை

  6. Hard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்

  7. கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா?

  8. விண்டோசில் காப்பி மற்றும் பேஸ்ட் வேலைகளை வேகமாக்க வேண்டுமா?

  9. ட்ரோஜன் ஹார்ஸ்'ன் கதை

  10. விண்டோஸ் விஸ்டாவில் எளிதாக நெட்வொர்க் இணைப்பு பெற.

     

    நன்றி ......

ஞாயிறு, 10 ஜூலை, 2011

ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்

நாம் மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்பு அதை டிவிடி பிளேயர்கள், மற்றும் டிவி 'களில் பார்ப்பதர்க்கு வெவ்வேரான ஃபார்மெட்களில் கன்வெர்ட் செய்ய வேண்டும்.  அத்ற்க்கு தேவையான
மென்பொருட்களை தனித்தனியாக டவுன்லோட்

வியாழன், 2 ஜூன், 2011

விண்டோஸில் வால் பேப்பர்களை அழிப்பது எப்படி?

தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
அதிகமாகப் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் முதலிடத்தில் இருப்பது விண்டோஸ் இயங்குதளங்கள் தான்.  அதில் Default ஆக வரும் வால் பேப்பர்கள், மற்றும் நாம் செட் செய்த வால் பேப்பர்கள் பிறகு நமக்கு பிடிக்காமல் போகலாம். அதற்க்காக பிடித்தமான வால் பேப்பர்களை மாற்றிக்கொண்டே இருப்போம்.  ஆனால் வால் பேப்பர் மாற்றும் போது நாம் முன்பே உபயோகபடுத்திய வால் பேப்பர் அழிவதில்லை.  அது குப்பைகளாக ந‌ம் கணினியில் தங்கிவிடும்.  அதை அழிப்பதற்க்கான வழி இதோ.


My Computer சென்று Local Disk (C:) ==> Windows ==> Web ==> Wallpaper


என்ற‌ Folder' ல் நீங்கள் உபயோகப்படுதிய அனைத்து வால் பேப்பர்களும் இருக்கும்.  தேவை இல்லாதவற்றை ( Shift+Delete-Enter ) அழுத்தி அழித்து விடுங்கள்.  நன்றி...

வியாழன், 26 மே, 2011

இலவச Antivirus 'களில் எது சிறந்தது?

இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான்.  ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து.  மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான்.  ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.

 AVIRA

  1. அற்புதமான இலவச Antivirus.  விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.  
  2. குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.  
  3. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
  4. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5.                                                                                                                    
                                                                                               Download link

       AVAST

      1.  பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 
      2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது.  எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.   
      3. வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.  இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
      4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

                                                                                              Download Link


        AVG

        1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
        2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
        3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
        4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.

                                                                                             Download Link



            ஞாயிறு, 8 மே, 2011

            பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை

            கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உபயோகப் படுத்துகிறோம்.  ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிரிகிறோம்.  MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய மெமரி level 'கள்
            உள்ளன.  அதைப்பற்றி என்னைக்குத் தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன்.  இது தெரியாதவர்களுக்கு மட்டும்.

            8 Bit                                        = 1 Byte

            1,024 Bytes                              = 1 Kilo Byte (KB)

            1,024 Kilo Bytes                      = 1 Mega Byte (MB)

            1,024 Mega Bytes                    = 1 Giga Byte (GB)

            1,024 Giga Bytes                      = 1 Tera Byte (TB)

            1,024 Tera Bytes                      = 1 Petta Byte (PB)

            1,024 Petta Bytes                      = 1 Exa Byte (EB)

            1,024 Exa Bytes                        = 1 Zetta Byte (ZB)

            1,024 Zetta Bytes                      = 1 Yotta Byte (YB)

            சனி, 7 மே, 2011

            Hard Disk தேவை இல்லை!

            இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம்.  USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம்.  ஆனால் அதை கணினியில் நிறுவிய பிறகுதான் பயன்படுத்த முடியும்.  அதற்காக Portable மென்பொருள்களை நாடுவோம் அது
            எல்லோருக்கும் தெரியும்.ஆனால் தற்போது பலரும் Portable
            இயங்குதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  அதில் நான் பயன்படுத்தி பிடித்த ஒரு Portable இயங்குதளத்திர்க்கான லிங்க் இதோ.   இது மட்டும் அல்லாமல் அதில் பதிந்து பயன்படுத்த கூடிய பல புதிய Portable மென்பொருட்களை அந்த தளத்தின் வலதுபுறம் காணலாம்.  தேவையானவற்றை பதிவிறக்கி USB Drive 'ல் பதிந்து கணினியில் பதியாமலும் பயன்படுத்தி மகிழலாம்.  இதை விட அதிக வசதிகளுடன் வேண்டும் என்றால் இந்த லிங்கில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம்.  இதில் 200 'க்கும் அதிகமான கேம் மற்றும் மென்பொருட்கள் பதிந்தே தரப்படுகிறது.  மற்றும் தேவையான போர்டபிள் மென்பொருட்களை பதிவிறக்கி பதிந்தும் பயன்படுத்தலாம்.

            வியாழன், 5 மே, 2011

            Hard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்

            அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hard Disk 'ல் பலவிதமான கோளாறுகள் எற்பட்டு அதனால் பிழை செய்தி காணப்படலாம்.  விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினியில்தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.


             சரி பிழை செய்திகள் எதனால் ஏற்படக்கூடும்?
            Hard Disk 'ல் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.  தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்கி விடுவோம்.  நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில File 'கள்  கணினியிலேயே தங்கிவிடும்.  அந்த File 'களால் கணினியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம்.  இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.  தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

            பிறகு மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளவும்.  பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தேர்வு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.

            பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும்.  பின் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்துகொள்ள வேண்டும். 

            இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும்.  விண்டோஸ் 7 க்கு இது மிக சிறந்த மென்பொருளாகும்.


            வெள்ளி, 8 ஏப்ரல், 2011

            கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா?

            -->
            உங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள்இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றனஅதில் ஒன்று co2saver என்ற
            மென்பொருள் கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட்
            செய்து பயன்படுத்தலாம்இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.

            Co2saver                                                        Download

            புதன், 6 ஏப்ரல், 2011

            விண்டோசில் காப்பி மற்றும் பேஸ்ட் வேலைகளை வேகமாக்க வேண்டுமா?

            நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை ( Tera copy ) பயன்படுத்தி பாருங்கள்.  இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் 50 % வரை வேகம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  இந்த சாப்ட்வேரை
            கீழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து
            பயன்படுத்துங்கள்.    

                      
            Tera copy                                                        Download


            வியாழன், 31 மார்ச், 2011

            COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

            நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.






            C     - Common
            O     - Oriented
            M    - Machine
            P     - Particularly
            U     - Used for
            T     - Trade
            E     - Education and
            R     - Research
            COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

            சனி, 19 மார்ச், 2011

            ட்ரோஜன் ஹார்ஸ்'ன் கதை

               ட்ராய் (Troy) என்னும் நாட்டுடன் நடந்த நீண்ட போரில் மரக் குதிரை ஒன்று பயன்படுதப்பட்டது.  ஹோமர் என்ற கிரேக்க கவிஞர் எழுதிய இலியட் என்னும் காவியத்தில் இந்த கதை கிடைக்கிறது.  அதில் கிரேக்கர்கள் போரிடும் போது ஒரு
            பெரிய மரத்தாலான குதிரையை விட்டுச் சென்றனர்.
            அதனைக் கண்ட ட்ராய் நாட்டவர்கள் அதனை அப்படியே தங்கள் கோட்டைக்குள் எடுத்துச் சென்றனர்.  கோட்டைக்கு வெளியே போர் நடக்கும்.  கோட்டைக்குள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள், மாலையில் போர் நிறுத்தம் இருக்கையில் கோட்டை கதவுகள் மூடப்படும்.  இந்த குதிரையை ட்ராய் வீரர்கள் உள்ளே எடுத்துச் சென்று கதவை மூடினர்.  அவர்களுக்குத் தெரியாது அந்த மரக் குதிரையின் வயிற்றுப் பகுதிக்குள் பல கிரேக்க வீரர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று.  பின் இரவில் வயிற்றுப் பகுதியைத் திறந்து வந்த கிரேக்க வீரர்கள் கோட்டைக் கதவினைத் திறந்து தங்கள் நண்பர்களை உள்ளே வரவிட்டு திடீரென கோட்டைக்குள் இருந்தவர்களைத் தாக்கி போரை வென்றனர்.
            சரி இதற்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்?
                 ட்ரோஜன் ஹார்ஸ் என அழைக்கப்படும் வைரஸும் இந்த கதையில் கிடைக்கும் மரக் குதிரை போலதான் செயல்படுகிறது.  வெளித் தோற்றத்தில் நல்ல புரோகிராம் போலத் தோற்றமளிக்கும் இது உண்மையில் பலமான அழிவை உண்டாக்கும் புரோகிராமாகும்.  புரோகிராமில் கூடுதலாக சில கோட் வரிகள் தரப்பட்டிருக்கும்.  அவை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கம்ப்பியூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை எடுத்து இந்த புரோகிராம் அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும்.  அல்லது கம்ப்பியூட்டரில் உள்ள டேட்டாவை கெடுக்கும் அல்லது அழிக்கும்.  இதில் மோசமான ட்ரோஜன் வைரஸ் புரோகிராம் எது என்றால் உங்கள் கம்பியூட்டரில் வைரஸ் உள்ளது.  இந்த லிங்க்கில் உள்ள புரோகிராமினைப் பயன்படுத்துங்கள், வைரஸ் நீக்கப்பட்டுவிடும் என்று அறிவித்து அதற்கு நேர்மாறாக கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்பும் புரோகிராம் தான்.

            இதிலிருந்து தப்புவதற்கான வழிகள்?
                 அவ்வப்போது ஆண்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள்.  தேவையில்லாத அட்டாச்மெண்ட்களைத் திறக்காதீர்கள்.  உங்கள் நண்பர்களிடமிருந்து வந்தது போல் தோற்றமளிக்கும் இமெயில்களைத் திறக்காதீர்கள்.  இலவசமாக ஸ்கேன் செய்திடலாம், வைரஸ்களை நீக்கிடலாம் என்று வரும் புரோகிராம்களிருந்து தள்ளியே நில்லுங்கள்.

            சனி, 12 மார்ச், 2011

            LCD - என்றால் என்ன?

            இப்போது நிறய வீடுகளில் LCD TV,களை தான் பயன்படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அதன் முழு பெயர் நிறயபேருக்குத் தெரியவில்லை அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.
            LCD - Liquid Crystal Display.  குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தி சிறிய
            தட்டையான டிஸ்பிளே பேனல்கள்
            மூலமாக படம் காட்டும் நவீன சாதனம்.  டிஜிட்டல் வாட்ச் முதல் கம்ப்யூட்டர் மானிட்டர், மற்றும் 'டிவி' களில் பயன்படுத்தப்படுகிறது. 

            திங்கள், 7 மார்ச், 2011

            விண்டோஸ் விஸ்டாவில் எளிதாக நெட்வொர்க் இணைப்பு பெற.

            பொதுவாக நெட்வொர்க் இணைப்புகளை எளிதாகப் பெறலாம்.
            ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் இது சற்று சிரமமாக உள்ளது.
            இதனை எளிதாக்க வழி உள்ளது.  ஸ்டார்ட் மெனு அழுத்தி
            கிடைக்கும்.
            ரன் டயலாக் பாக்ஸில் ncpa.cpl என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.
            உங்கள் நெட்வொர்க் இணைப்பு எளிதாக உடனே கிடைக்கும்.

            நன்றி.     மீண்டும் வருக...

            தமிழ் திரட்டிகளுக்கான Share Button

            உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...