வியாழன், 31 மார்ச், 2011

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


C     - Common
O     - Oriented
M    - Machine
P     - Particularly
U     - Used for
T     - Trade
E     - Education and
R     - Research
COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

உங்களுடைய BSNL 2G SIM'ஐ 3G ஆக மாற்ற

உங்களிடம் உள்ள 2G sim'ல் இருந்து M3G என்று டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.  சிறிது நேரம் கழித்து உங்களுக்கு ஒரு SMS BSNL'ல் இருந்து வரும்.
பிறகு நீங்கள் M3GY என்று டைப் செய்து  53733 என்ற
எண்ணுக்கு மீண்டும் ஒரு SMS அனுப்பவேண்டும்.
அவ்வளவுதான் 48 மணி நேரத்திற்குப் பிறகு உங்களுடைய BSNL SIM 2G' யில் இருந்து 3G ஆக மாறிவிடும்.

சனி, 19 மார்ச், 2011

ட்ரோஜன் ஹார்ஸ்'ன் கதை

   ட்ராய் (Troy) என்னும் நாட்டுடன் நடந்த நீண்ட போரில் மரக் குதிரை ஒன்று பயன்படுதப்பட்டது.  ஹோமர் என்ற கிரேக்க கவிஞர் எழுதிய இலியட் என்னும் காவியத்தில் இந்த கதை கிடைக்கிறது.  அதில் கிரேக்கர்கள் போரிடும் போது ஒரு
பெரிய மரத்தாலான குதிரையை விட்டுச் சென்றனர்.
அதனைக் கண்ட ட்ராய் நாட்டவர்கள் அதனை அப்படியே தங்கள் கோட்டைக்குள் எடுத்துச் சென்றனர்.  கோட்டைக்கு வெளியே போர் நடக்கும்.  கோட்டைக்குள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள், மாலையில் போர் நிறுத்தம் இருக்கையில் கோட்டை கதவுகள் மூடப்படும்.  இந்த குதிரையை ட்ராய் வீரர்கள் உள்ளே எடுத்துச் சென்று கதவை மூடினர்.  அவர்களுக்குத் தெரியாது அந்த மரக் குதிரையின் வயிற்றுப் பகுதிக்குள் பல கிரேக்க வீரர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று.  பின் இரவில் வயிற்றுப் பகுதியைத் திறந்து வந்த கிரேக்க வீரர்கள் கோட்டைக் கதவினைத் திறந்து தங்கள் நண்பர்களை உள்ளே வரவிட்டு திடீரென கோட்டைக்குள் இருந்தவர்களைத் தாக்கி போரை வென்றனர்.
சரி இதற்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்?
     ட்ரோஜன் ஹார்ஸ் என அழைக்கப்படும் வைரஸும் இந்த கதையில் கிடைக்கும் மரக் குதிரை போலதான் செயல்படுகிறது.  வெளித் தோற்றத்தில் நல்ல புரோகிராம் போலத் தோற்றமளிக்கும் இது உண்மையில் பலமான அழிவை உண்டாக்கும் புரோகிராமாகும்.  புரோகிராமில் கூடுதலாக சில கோட் வரிகள் தரப்பட்டிருக்கும்.  அவை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கம்ப்பியூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை எடுத்து இந்த புரோகிராம் அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும்.  அல்லது கம்ப்பியூட்டரில் உள்ள டேட்டாவை கெடுக்கும் அல்லது அழிக்கும்.  இதில் மோசமான ட்ரோஜன் வைரஸ் புரோகிராம் எது என்றால் உங்கள் கம்பியூட்டரில் வைரஸ் உள்ளது.  இந்த லிங்க்கில் உள்ள புரோகிராமினைப் பயன்படுத்துங்கள், வைரஸ் நீக்கப்பட்டுவிடும் என்று அறிவித்து அதற்கு நேர்மாறாக கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்பும் புரோகிராம் தான்.

இதிலிருந்து தப்புவதற்கான வழிகள்?
     அவ்வப்போது ஆண்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள்.  தேவையில்லாத அட்டாச்மெண்ட்களைத் திறக்காதீர்கள்.  உங்கள் நண்பர்களிடமிருந்து வந்தது போல் தோற்றமளிக்கும் இமெயில்களைத் திறக்காதீர்கள்.  இலவசமாக ஸ்கேன் செய்திடலாம், வைரஸ்களை நீக்கிடலாம் என்று வரும் புரோகிராம்களிருந்து தள்ளியே நில்லுங்கள்.

சனி, 12 மார்ச், 2011

LCD - என்றால் என்ன?

இப்போது நிறய வீடுகளில் LCD TV,களை தான் பயன்படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அதன் முழு பெயர் நிறயபேருக்குத் தெரியவில்லை அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.
LCD - Liquid Crystal Display.  குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தி சிறிய
தட்டையான டிஸ்பிளே பேனல்கள்
மூலமாக படம் காட்டும் நவீன சாதனம்.  டிஜிட்டல் வாட்ச் முதல் கம்ப்யூட்டர் மானிட்டர், மற்றும் 'டிவி' களில் பயன்படுத்தப்படுகிறது. 

திங்கள், 7 மார்ச், 2011

மொபைல் டிப்ஸ்,டிப்ஸ்,டிப்ஸ்

  1. மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம்.  எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.
  2. ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.
  3. பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன்மட்டும் வைத்து இயக்கவும்.  உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்பதனைத் தவிர்த்திடுங்கள்.
  4. செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களைத் தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.                                                              சென்சிடிவ் மைக் உள்ளத்தால் மொபைலில் மென்மையாக பேசவும்.           

விண்டோஸ் விஸ்டாவில் எளிதாக நெட்வொர்க் இணைப்பு பெற.

பொதுவாக நெட்வொர்க் இணைப்புகளை எளிதாகப் பெறலாம்.
ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் இது சற்று சிரமமாக உள்ளது.
இதனை எளிதாக்க வழி உள்ளது.  ஸ்டார்ட் மெனு அழுத்தி
கிடைக்கும்.
ரன் டயலாக் பாக்ஸில் ncpa.cpl என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.
உங்கள் நெட்வொர்க் இணைப்பு எளிதாக உடனே கிடைக்கும்.

நன்றி.     மீண்டும் வருக...

வெள்ளி, 4 மார்ச், 2011

Trojan என்றால் என்ன?

Trojan என்பது கெடுதல் விளைவிக்கும் ஒரு புரோகிராம்.
இது ஒரு நல்ல புரோகிராம் போல காட்சி அளிக்கும்.
எடுத்துக்காட்டாக உங்களுக்கு பிடித்தமான புரோகிராம் போலவும் அல்லது கேம்ஸ், சாஃப்ட்வேர் போலவும் காட்சி
அளிக்கும்.
Trojan உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தவுடன் உங்கள்
சுய விபரங்க‌ளை ( பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண், etc ) திருடி புரோகிராமில் செட் செய்யப்பட்டு இருக்கும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.  இவை அனைத்தும் உபயோகிப்பவருக்குத் தெரியாமலேயே நடந்துவிடும்.

என்னுடைய தளத்திற்க்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.   மீண்டும் வருக...

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...