புதன், 15 ஜூன், 2011

பதிவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும் ஏன்?

பதிவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும்.  ஏன் என்று தெரியவில்லையா ஏனென்றால் நாம் ப்ளாக் வைத்திருந்தால் கண்டிப்பாக கேட்ஜெட் சேர்திருப்போம்.  சில கேட்ஜெட்களை ப்ரௌசர்கள்
அனுமதிப்பதே இல்லை.  ஏனென்றால் அவை அதிக
லிங்க்குகளை கொண்டிருக்கலாம்.  அல்லது கெடுதல் விளைவிக்கும் நிரல்களைக் கொண்டிருக்கலாம்.  இதனால் உங்கள்  வலைதளம் உலாவிகளில் திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம், அல்லது திறக்காமலே போகலாம்.



அல்லது நாம் பதிவு எழுதும் போது அதற்க்கான தலைப்பை தேர்வு செய்வோம்.  தேர்வுசெய்து எழுதும் தலைப்பில் ( ,.-_'; ) போன்ற குறியீடுகளை பயன்படுத்துவோம்.  இதனால் நம் பதிவு சில பிரவுசர்களால் காட்ட முடியாமலும் போகலாம்.  இதனால் தான் பதிவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்த பிரவுசர்களையாவது பயன்படுத்தி பரிசோதித்து பார்த்துக் கொள்கிறார்கள்.   ஏதேனும் பிழை செய்தி வந்தால் திருத்திக் கொள்கிறார்கள்.  நான் பார்த்தவரை பதிவர்கள் அதிகமாக உபயோகிக்கும் பிரௌசர் ஆப்ரா தான்.  ஏனென்றால் மற்ற பிரவுசர்களை ஒப்பிடுகையில் புதிய வசதிகளை முதலில் தருவது ஆப்ரா தான்.


சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ப்ரௌசர்களை பயன்படுத்தினால் கணினி மெதுவாக இயங்கும் எனவும் எரர் ஏற்படும் என்றும் கூறுவார்கள்.  அது முற்றிலும் தவறு.  ஏன்னென்றால் மற்ற மென்பொருள்களை போலதான் ப்ரௌசரும் செயல்படுகிறது.  வெவ்வேறு ப்ரௌசர்களை பயன்படுத்திப் பார்த்து உங்கள் இணையத்தை சிறப்பானதாக அமைக்கலாம்.   நன்றி...




கருத்துகள் இல்லை:

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...