சனி, 13 ஆகஸ்ட், 2011

Google Search Engine 'னில் தமிழில் Type செய்யலாம்.

நாம் தினமும் கூகிள் Search Engine உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுகிறோம்.  இது தமிழர்கள் செய்யும் மிக பெரிய தவறு தமிழ் தளங்களை நாமே ஒதுக்கி வைத்தால் யார் தான் தமிழ் தளங்களை படிப்பது நமக்காகதான் அவர்கள் நேரம் செலவழித்து எழுதுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் தொடர்ந்து தமிழில் தேடுவதால் தமிழில் எழுதுபவர்களுக்கும் ஆர்வம் உண்டாகும்.  இதனால் தமிழுக்கு Adsense விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

நாம் கூகுளில் தமிழில் தேடாததற்க்கு முக்கிய காரணம்.  நம்மால் கூகுளில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாது என்பதே.


அதற்க்கு ஒரு வசதி உள்ளது.  முதலில் கூகுளில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.



பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளது போல் தேடுதல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள தமிழ் Keyboard Click செய்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு  Popup Keyboard வரும்.  அதை மூடாமல் தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்யுங்கள்.  இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.

நன்றி...

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...