Firefox 4 உலாவி தற்போது வெளிவந்துள்ளது. அதற்க்கான லிங்க் இதோ.
பலர் அதிகமாக விரும்பி பயன்படுத்தும் இணைய உலாவியில் நெருப்பு நரி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் அதில் கொடுத்துள்ள செட்டிங்குகளை அதாவது ( Tab color etc... ) நம்இஷ்டத்திர்க்கேர்ப்ப மாற்ற முடியாது. ஆனால் அதை மாற்றும் வழியை தந்துள்ளது Mozilla நிறுவனம்.
இதன் தோற்றத்தை மேம்படுத்த ஒரு நீட்சி உள்ளது . இந்த நீட்சியை பயன்படுத்தி பல்வேறு விதமான மாற்றங்களை செய்ய முடியும். இதற்க்கான தரவிறக்கச் சுட்டி இதோ
இணையத்தின் உதவியுடன் நீட்சியை நெருப்பு நரி உலாவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை உலாவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் S என்ற ஐகானை அழுத்தி தோன்றும் விண்டோவில் மாற்றங்களை செய்து கொள்ள முடியும். டூல்பாரினுடைய நிறம், அகலம், உயரம், போன்றவற்றை விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியும். மேலும் அட்ரஸ் பாரினுடைய பட்டையையும் மாற்றிக்கொள்ள முடியும். மொத்தத்தில் நெருப்பு நரி உலாவியை நமது விருப்பப்படி மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த நீட்சியானது நெருப்பு நரி 4 உலாவியில் மட்டுமே செயல்படக் கூடியது.