திங்கள், 4 ஏப்ரல், 2011

புதிய கூகிள் குரோம் 10 வெளியாகியது

கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தனது பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது.  மூன்று வார சோதனை தொகுப்பு காலத்திற்க்குப்  பின் இது வெளியாகி உள்ளது.  ஆறு வார காலத்திற்க்கு  ஒரு முறை குரோம் பிரவுசர்
புதுப்பிக்கப்படும் என்ற நிறுவனத்தின் உறுதி மொழி
மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது.  கடந்த 2008 ஆம் ஆண்டில் குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து பயன்படுத்த முனைந்தனர்.  பின்னர் பழகிப்போன சில வசதிகளுக்காக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர்.  ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால் மற்றவற்றை நாடமாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது.  இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.

முதல் அம்சமாக அதன் வேகத்தை கூறலாம்.  முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக இதனை சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  Crankshaft javascript இதற்க்கு துணை செய்கிறது.

இந்த பதிப்பில் குரோம் பிரவுசரின் செட்டிங்க்ஸ் அனைத்தும் டேப்களில் தரப்பட்டுள்ளன இதனால் இவற்றைக் கையாள்வது எளிதாகிறது.  இந்த குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை உங்களின் எந்த கம்ப்பியூட்டரிலும் இணைத்துச் செயல்படுத்தலாம்.

பொதுவாக கூகிள் தன் சாதனங்களில் பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும்.  இந்த பிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைத்து தரப்படுகிறது.  பொதுவாக பிளாஷ் பயன்பாடு முலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்யூட்டரைக்  கெடுக்கின்றன.  இதனை மனதில் கொண்டு, கூகுல் தன் sand box பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருக்குள்ளாக அமைத்துள்ளதுஎனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது. விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்று காட்டினால், அவர்களுக்கு 20,000 டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளதுமேலும் குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பில் ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டுமானாலும் அதற்கு தீர்வு காணலாம்.

குரோம் பிரவுசரை இலவசமாக இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Download

2 கருத்துகள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

தோழி பிரஷா copy paste pannittingalaa?

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...