ட்ராய் (Troy) என்னும் நாட்டுடன் நடந்த நீண்ட போரில் மரக் குதிரை ஒன்று பயன்படுதப்பட்டது. ஹோமர் என்ற கிரேக்க கவிஞர் எழுதிய இலியட் என்னும் காவியத்தில் இந்த கதை கிடைக்கிறது. அதில் கிரேக்கர்கள் போரிடும் போது ஒரு
பெரிய மரத்தாலான குதிரையை விட்டுச் சென்றனர்.
அதனைக் கண்ட ட்ராய் நாட்டவர்கள் அதனை அப்படியே தங்கள் கோட்டைக்குள் எடுத்துச் சென்றனர். கோட்டைக்கு வெளியே போர் நடக்கும். கோட்டைக்குள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள், மாலையில் போர் நிறுத்தம் இருக்கையில் கோட்டை கதவுகள் மூடப்படும். இந்த குதிரையை ட்ராய் வீரர்கள் உள்ளே எடுத்துச் சென்று கதவை மூடினர். அவர்களுக்குத் தெரியாது அந்த மரக் குதிரையின் வயிற்றுப் பகுதிக்குள் பல கிரேக்க வீரர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று. பின் இரவில் வயிற்றுப் பகுதியைத் திறந்து வந்த கிரேக்க வீரர்கள் கோட்டைக் கதவினைத் திறந்து தங்கள் நண்பர்களை உள்ளே வரவிட்டு திடீரென கோட்டைக்குள் இருந்தவர்களைத் தாக்கி போரை வென்றனர்.
சரி இதற்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்?
ட்ரோஜன் ஹார்ஸ் என அழைக்கப்படும் வைரஸும் இந்த கதையில் கிடைக்கும் மரக் குதிரை போலதான் செயல்படுகிறது. வெளித் தோற்றத்தில் நல்ல புரோகிராம் போலத் தோற்றமளிக்கும் இது உண்மையில் பலமான அழிவை உண்டாக்கும் புரோகிராமாகும். புரோகிராமில் கூடுதலாக சில கோட் வரிகள் தரப்பட்டிருக்கும். அவை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கம்ப்பியூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை எடுத்து இந்த புரோகிராம் அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அல்லது கம்ப்பியூட்டரில் உள்ள டேட்டாவை கெடுக்கும் அல்லது அழிக்கும். இதில் மோசமான ட்ரோஜன் வைரஸ் புரோகிராம் எது என்றால் உங்கள் கம்பியூட்டரில் வைரஸ் உள்ளது. இந்த லிங்க்கில் உள்ள புரோகிராமினைப் பயன்படுத்துங்கள், வைரஸ் நீக்கப்பட்டுவிடும் என்று அறிவித்து அதற்கு நேர்மாறாக கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்பும் புரோகிராம் தான்.
இதிலிருந்து தப்புவதற்கான வழிகள்?
அவ்வப்போது ஆண்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். தேவையில்லாத அட்டாச்மெண்ட்களைத் திறக்காதீர்கள். உங்கள் நண்பர்களிடமிருந்து வந்தது போல் தோற்றமளிக்கும் இமெயில்களைத் திறக்காதீர்கள். இலவசமாக ஸ்கேன் செய்திடலாம், வைரஸ்களை நீக்கிடலாம் என்று வரும் புரோகிராம்களிருந்து தள்ளியே நில்லுங்கள்.

4 கருத்துகள்:
தொழில்நுட்பம் சார்ந்த பதிவாயினும் பெயரின் காரணத்தோடு விளக்கிய விதம் அருமை நண்பரே
கமெண்ட் ல் word verification ஐ எடுத்துவிடுங்கள்.
நன்றி வாழ்த்துகள்
உங்கள் கருத்துரைக்கு நன்றி...
இதுவரை அறிந்திராத புதிய செய்தி. பெயர் நன்றாக பொருந்துகிறது. அறியத் தந்தமைக்கு நன்றி நண்பா!
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
கருத்துரையிடுக