தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.

Popular Posts

BTemplates.com

About Me

எனது படம்

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‌ குட்டம் என்னும் ஊரில் பிறந்தவன் இப்போது சென்னையில் வசிக்கிறேன்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Airtel 'லில் நமக்குத் தேவை இல்லாத வசதிகளை நாமே நிறுத்தலாம்.

இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள மொபைல் ஆப்பரேடர் ஏர்டெல் என்பது எல்லோருக்கும் தெரியும்.  எல்லா மொபைல் ஆப்பரேட்டர்களிலும் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை ஏதாவது ஒரு Service activate ஆகி இருந்ததென, நாம் பணம் போடும்போது நம் பணத்தை மொத்தமாக எடுத்துவிடுவார்கள் அல்லது தினமும் ஒரு ஒரு ரூபாயாக எடுத்து விடுவார்கள்.  பிறகு Customer Care 'க்கு போன் செய்தால்.  அவர்கள் 24 மணி நேரத்தில் நிறுத்திவிடுகிறோம் என்று கூறுவார்கள் அதை நம்பி நாம் Recharge செய்தால் திரும்பவும் பணம் போய்விடும்.

ஆனால் இந்தியாவில் முதன்மை ஆப்பரேட்டர்களில் உள்ள ஏர்டெல் அந்த பொறுப்பை நம்மிடமே விட்டுவிட்டது.

புதிதாக எதாவது Service Activate அல்லது DeActivate என எது வேண்டுமானாலும் நாமே நம் மொபைலிலேயே செய்துக் கொள்ளலாம். 


எப்படி என்பதை பார்க்கலாம்?

முதலில் *121# Dial  செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு Menu தோன்றும்.


 1. My Airtel My Offer
 2. Balance & Validity
 3. Coupon Recharge
 4. Start a Service 
 5. Stop a Service
 6. Recharge Now
0. Next

Replay With your Choice.


இதில் 5 அதாவது Stop a Service தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.
பிறகு ஒரு Menu தோன்றும் அதில் உங்கள் மொபைலில் என்ன Service Activate ஆகியுள்ளது என தெரியும்.

 1. Teen Pack
 2. SMS Pack

என இவ்வாறு தோன்றும்.


இதில் உங்களுக்கு எந்த Service வேண்டாமோ அதை (அதாவது 1 அல்லது 2 ஐ ) தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.

பிறகு வரும் மெனுவில் 1 தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.  இப்போது உங்கள் Service முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கும்.

இனி Recharge செய்து பேசி மகிழுங்கள்.   
நன்றி.


7 on: "Airtel 'லில் நமக்குத் தேவை இல்லாத வசதிகளை நாமே நிறுத்தலாம்."
 1. Airtel பயனாளர்களுக்கு பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

  பதிலளிநீக்கு
 2. இதுபோல் நாம் விரும்பாமலேயே எப்படி இவை ஆக்டிவேட் ஆகிறது என்று தெரியாமல் நான் முழித்துக்கொண்டிருந்தேன். நான் வழக்கமாக ரீசார்ஜ் செய்யும் கடையில் இதுபற்றி நான் கேட்டபோது (அவர் எனக்கு நண்பராகிவிட்டபடியால் சொன்னார்) நமக்கு ஏர்டெல்லிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.களை நாம் படித்தாலே போதுமாம்... ஆக்டிவேட் ஆகிவிடுமாம்... எப்படி இருக்கிறது பாருங்கள்...

  பதிலளிநீக்கு