வெள்ளி, 17 ஜூன், 2011

வலைப்பதிவு துவங்க அதிக நேரம் எடுக்கிறதா?

நம் வலைப்பதிவு மெதுவாக திறந்தால் வலைபதிவிற்கு வரும் வாசகர்கள் அடுத்தமுறை வருவதற்கு தயங்கலாம்.  உங்கள் வலைப்பதிவு மெதுவாக இயங்குவதற்கு நிறைய காரணங்கள்
இருக்கலாம்.  எனக்கு தெரிந்த சில காரணங்களை கூறுகிறேன். அதிகமாக தேவையில்லாத gadget/widget 'களை சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்


தமிழ் பதிவர்கள் அதிகமாக உபயோகிக்கும் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகள் Load ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.   அதனால் மிக அதிகமான ஹிட் கிடக்கும் திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள்.
திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை உங்கள் பதிவுக்கு மேலே சேர்க்கவேண்டாம்.  பதிவுக்கு மேலே சேர்த்தால் ஒட்டுப்பட்டை Load ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் பதிவு திரையில் வருவதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.  அதனால் ஒட்டுப்பட்டைகளை பதிவின் கீழே சேருங்கள்.  இதனால் பதிவு திரையில் வந்த பிறகு ஒட்டுப்பட்டைகள் லோடு ஆகும்.


கூகிளில் புதிதாக வெளியானா +1 Button.  Facebook 'க்கு போட்டியாக வந்திருக்கிறது இதனால் சில உலாவிகளில் நம் வலைப்பதிவை திறக்கும் போது HTTP 'ல் இருந்து HTTPS 'க்கு Redirect ஆகிறது.  மேலும் சில பிரச்சனைகளும் இருந்து வருகிறது.  +1 Button 'னும் மிக மெதுவாகத்தான் லோடு ஆகிறது.வலைபதிவில் அதிகமாக அனிமேசன் படங்களை சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

    மேலே கொடுத்துள்ள வழிமுறைகளை படித்தது பயன்பெறுங்கள் .  உங்கள் வாசகர்களை இழக்காமல் காத்துக்கொள்ளுங்கள்.  நன்றி...    தமிழ் பிளாக்ஸ் திரட்டியில் பதிவை இணைத்தால் 3100 பேருக்கு சென்றடையும்.

    தமிழன் திரட்டி Facebook பக்கத்தை http://tamilblogs.in திரட்டியுடன் இனைத்தாயிற்று இனி நீங்கள் http://tamilblogs.in திரட்டியில் பதிவை இன...