செவ்வாய், 3 மே, 2011

விண்டோஸை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?

  • லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • வைரஸ் பிரச்சனைகள் கிடையாது.  மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ் தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.
  • விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்சில் கிடையாது.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது.
  • லினக்ஸ் இயங்குதளத்தின் கோப்பு நிர்வாகம் மிகவும் வலிமையாக உள்ளது. அதனால் லினக்ஸ் இயங்குதளத்தில் Defragmentation செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் License பற்றி கவலைப்படத் தேவையில்லை. 
  • லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்ப்பட்ட File System (FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும்.  விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System (FAT, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும். 
  • விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition -  ல் மட்டுமே நிறுவமுடியும்.  லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition & லும் நிறுவ முடியும்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் PAD, CELL PHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.
  • லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நபர்களுடன் பகிரிந்து கொள்ளலாம்.  ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகும்.
  • லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக(Live CD) பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization (XEN/KVM/VirtualBox/etc..) மென்பொருள்களுடன் வருகிறது.  இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • லினக்ஸினுடைய  Kernal நிறைய வன்பொருள்களுக்கான Driver களுடன் வெளியிடப்படுகிறது.  ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.
  • லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது.  உங்களுடைய மொழியிலும் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.
  • விண்டோசில் இருந்து லினக்ஸ்க்கு மாறுவதற்கு முக்கியத் தடையாக இருந்து வந்த பிரச்சனை தீர்க்கபட்டு வருகிறது.  அதன் முதல் படியாக விண்டோசில் உபயோகப் படுத்தப்படும் சில சாப்ட்வேர்களை இப்போது லினக்ஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும்.  அதற்காக ஒரு சாப்ட்வேர்  உள்ளது அதன் பெயர் WINHQ இதற்க்கான லிங்க் இதோ.
  • பரவலாக பயன்படுத்தப்படும் லினக்ஸ் இயங்குதளம் உபுண்டு அதற்க்கான லிங்க் இதோ.

7 கருத்துகள்:

அணில் சொன்னது…

லினக்ஸ் குறித்து நன்றாக எழுதியிருக்கிறீகள். லினக்சில் அதிகம் ஈடுபாடு கொண்ட பலர் இதில் வைரஸ் வரவே வராது எனச் சொல்வதுதான் வியப்பாக இருக்கிறது. லினக்சிலும் வைரஸ் வரும். என்ன விண்டோசுக்காக பிரத்யேகமாக எழுதப்பட்ட வைரஸ் லினக்சில் இயங்காதேன்பதே உண்மை.

S. Robinson சொன்னது…

@ந.ர.செ. ராஜ்குமார்உங்கள் கருத்துரைக்கு நன்றி...

Shanmugasundaram சொன்னது…

@ந.ர.செ. ராஜ்குமார் இதை தாங்கள் சற்று விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.

S. Robinson சொன்னது…

@Shanmugasundaramசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் லினக்ஸ் 'ஐ பொறுத்தவரை நீங்களும் ஒரு User தான். லினக்ஸ் Admin ஆக Rootkit என்ற ஒரு செயலி தானியங்கியாக செயல்படும். அதனால் தான் Admin அதாவது நீங்கள் லினக்சில் ஏதாவது மாற்றம் செய்தால் உங்களிடமும் Password கேட்கிறது. நீங்கள் முதல் கருத்துரையில் சொல்லியிருப்பது உண்மையே. உங்கள் கருத்துரைக்கு நன்றி...

nalama சொன்னது…

Hello sir,
i like Linux but i couldn't use few software in Linux OS.As i am a trader,i should use the trading software like Trade Tiger 1.4.0.9 and Amibroker.i have asked Linux's setup from my sharekhan company but they are not interested.This is my problem. can u help me?

S. Robinson சொன்னது…

@josephamalanஇந்த லிங்கில் http://www.winehq.org/download/ உள்ள மென்பொருளை உங்கள் லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக் கொள்ளுங்கள் பிறகு இந்த மென்பொருள் உதவியுடன் நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவும் மென்பொருள்களை லினக்ஸிலும் நிறுவி பயன்படுத்தலாம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு

சூப்பர் சூப்பர் சூப்பர் ஜீ

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...